தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 3PM - இன்றைய முக்கிய 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 3, 2021, 3:09 PM IST

1. ஈடில்லா ஞானத்தைத் தந்தார் குடியரசுத் தலைவர் - ஸ்டாலின் நெகிழ்ச்சி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மூன்று புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

2. மேற்கு, கடலோர மாவட்டங்களில் லேசான மழை - வானிலை ஆய்வு மையம்

மேற்கு, கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

4. 69% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவே உத்தரவிட்டதாகக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

5. ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

6. தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலை 216 ஆம் நினைவு நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

7. வெளியாகிய சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.

8. மக்களின் பிரதிநிதி நான் - சைக்கிளில் பயணித்த ராகுல்

நாட்டின் விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதமாக ராகுல் காந்தி சைக்கிளில் பயணம் செய்தார்.

9. இறுதிகட்டத்தில் ஆர்.ஆர்.ஆர். - உக்ரைன் பறந்த படக்குழு

'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழு உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளது.

10. முதல் முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details