தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 25, 2021, 3:14 PM IST

1. பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2. Operation Disarm: 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் 2ஆயிரத்து 512 ரவுடிகளை கைது செய்யப்பட்டு அதில் 733 ரவுடிகளை சிறையில் அடைத்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

3. தடுப்பூசி சிறப்பு முகாம் - 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.25) நடைபெறும் 20 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4. 'சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்'- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்தும், கடந்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

5. காவல் துறையின் அதிரடி நடவடிக்கை - கொத்தாக கைதான ரவுடிகள்

தமிழ்நாடு காவல் துறை நடத்தி வரும் "ஸ்டாமிங் ஆப்பரேஷன்" மூலம் 36 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. ‘திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது’ - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

7. குடிமைப் பணித்தேர்வு முடிவு 2020: முதலிடம் பெற்ற பிகாரைச் சேர்ந்த சுபாம்குமார்

கடந்தாண்டு குடிமைப் பணிகளுக்கு நடந்த தேர்வில் பீகாரை சேர்ந்த சுபாம் குமார் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

8. வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று நம்பப்படுகிறது.

9. ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என ஐநா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

10. எஸ்பிபியின் நினைவு நாள்: பாடும் நிலா மறைந்து ஓராண்டு நிறைவு!

மரணம் எல்லோருக்கும் வரும்.அதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் சாதனையாளரின் மறைவு, இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும் பேரிழப்பு. அப்படிப்பட்ட இழப்புகளை இந்த கரோனா தந்துவிட்டு சென்றது.

ABOUT THE AUTHOR

...view details