தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

By

Published : Aug 24, 2021, 2:57 PM IST

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. மாநகராட்சி ஆகிறது தாம்பரம்

தமிழ்நாடு தலைநகர் சென்னை அருகே இருக்கும் தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது.

2. சென்னையில் நில அதிர்வு - மக்கள் அதிர்ச்சி!

சென்னையிலிருந்து வடகிழக்கில் 320 கி.மீ. தொலையில் வங்கக்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதிசெய்தது.

3. பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி. ராகவன் விலகல்

தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி. ராகவன் அறிவித்துள்ளார்.

4. விரைவில் உள்ளாட்சித் தேர்தல்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனக் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மனுக்கள் தள்ளுபடி

சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ல் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

6. கருணாநிதிக்கு நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளார்.

7. 'பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க வேண்டும்'

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோா்களிடம் கருத்துகளைக் கேட்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

8. ஆப்கனுக்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்?

ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது. இந்த விமானத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஈரானுக்குக் கடத்திச் சென்றதாகக் தகவல்கள் வெளியாகின.

9. தங்கம், வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 880 என விற்பனையாகிறது.

10. முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details