தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 pm - சென்னை

ஈடிவி பார்த்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 19, 2021, 2:57 PM IST

1. 'வரி குறைப்பினால் நாளொன்று 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை'

பெட்ரோல் மீதான வரி குறைப்பினால் நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 21 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனையாவதாக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2. கொடநாடு வழக்கை திசை திருப்புகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொடநாடு கொலை வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, குறுக்கு வழியில் வழக்கை திசை திருப்ப முயல்கின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

3. அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேனா? - அப்பாவு விளக்கம்

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை அவையிலிருந்து அவர்களாகத்தான் வெளியேறினார்கள் என்று அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

4. இந்தியில் பதிலளிப்பது சட்டத்திற்கு எதிரானது - ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் குட்டு

மதுரை: ஒரு மாநிலம் எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

5. டெல்லியில் ஓடும் காரில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்: இரண்டு பேர் கைது!

டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

6. 'புல்லட் பண்டி'க்கு குத்தாட்டம் போட்ட மணமகள்... ஓவர்நைட்டில் ட்ரெண்டிங்!

திருமண நிகழ்ச்சியில் மணமகனை வரவேற்க குத்தாட்டம் போட்ட மணமகளின் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

7. 'ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்பதே முதன்மை நோக்கம்' - வெளியுறவுத் துறை அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஆப்கனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதே முதன்மை நோக்கம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

8. ’வங்கி லாக்கரை உடைக்க அதிகாரம்’ - புதிய விதிகள் அறிவிப்பு!

வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

9. ’வாழ்வின் தருணங்களை உறைய வைப்போம் வாருங்கள்...’ உலக புகைப்பட தினம்

நிகழ்காலத்தின் தருணங்களை உறைய வைத்து, அக்காலத்துக்கே எதிர்காலத்தில் நம்மை மீண்டும் கூட்டிச் செல்லும் விந்தையை புகைப்படங்கள் நிகழ்த்துகின்றன. இந்தப் புகைப்படங்கள் நினைவுகளை மட்டுமல்லாது, நாம் அன்று உணர்ந்த மகிழ்ச்சியையும் களிப்பையும் உடன் மீட்டுத்தருகின்றன.

10. கமல் ஹாசன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சுஹாசினி

கமல் ஹாசன் வீட்டில் நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details