தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்...

By

Published : Aug 17, 2021, 2:55 PM IST

Updated : Aug 17, 2021, 6:38 PM IST

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. தமிழ்நாட்டில் செப். 13இல் தேர்தல்: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த திமுக!

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜானின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள அந்த இடத்திற்கு செப்டம்பர் 13 அன்று தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2. அர்ச்சகர்களை பணியிடை நீக்கம் செய்யவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அர்ச்சகர் யாரையும் பணியிடை நீக்கம் செய்யவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. முரசொலி மாறன் பிறந்தநாள்: உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக ஓங்கி ஒலித்த 'கலைஞரின் மனசாட்சி'!

முன்னாள் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான முரசொலி மாறன், தோஹாவில் நடைபெற்ற வர்த்தகக் கூட்டத்தில் வளரும் நாடுகளுக்கு பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி, அங்கிருந்த வளரும் நாடுகளின் ஆதரவைத் திரட்டி வல்லாதிக்க அமெரிக்க அரசையே திகைக்க வைத்தார்.

4. 'பள்ளிகள் திறப்பு எப்போது...' - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்துவதற்கு மதுரை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

5. கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியது கருணாநிதி செய்த தவறு என்றால், அந்த தவறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செய்வார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

6. கிடுகிடுவென உயரும் சிலிண்டர் விலை - மக்கள் அதிருப்தி

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சமையல் எரியாவு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 875. 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

7. அப்போ அணில்; இப்போ பாம்பு? - செந்தில்பாலாஜி எடுத்த நாக அஸ்திரம்!

பல கோமாளிகளின் மேதாவித்தனங்களைக் காணும்போது, பாம்பு பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை எனத் தோன்றுவதாக செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார். ஏன் அப்படி கூறுகிறார், யாரைக் குறிப்பிடுகிறார் என்பது குறித்தும், முன்னர் நடந்த சில விவகாரங்கள் குறித்தும் காணலாம்.

8. இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்க உள் துறை அமைச்சகம் இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவுஇசைவு) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியர்கள் விரைவில் விசா பெற்று உடனே தாயகம் திரும்ப முடியும்.

9. ENG vs IND: லண்டன் தாதா கோலி; லார்ட்ஸில் வென்றது இந்தியா!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஏழு ஆண்டுகளுக்குப் பின் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

10. 'பிளாக் பண்ணத்தான் செய்வேன்...' இயக்குநர் சேரன் ஆவேசம்!

நாகரிகம் தெரியாமல் வார்த்தைகளைப் பயன்படுத்தும் எவரையும் நண்பர்களாக ஏற்கவேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 17, 2021, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details