தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்...

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்...

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்  3 மணி செய்திகள்  Top 10 news @ 3 PM
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 PM

By

Published : Jan 19, 2021, 3:40 PM IST

1.விடுதிகளில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை!

புதிதாக வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள ஒரு சாதாரண விடுதியில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2.தமிழ்நாடு அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

தமிழ்நாடு அமைச்சர்களுடன் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

3.10 மாதங்களுக்கு பின் உற்சாகமாக பள்ளி திரும்பிய மாணவர்கள்

10 மாதங்களுக்கு பிறகு உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளான ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

4.கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 10,064 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 64 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

5.உலக அளவில் வசூலில் முதலிடம் - மாஸ்டர் தி பிளாஸ்டர்!

உலக அளவில் வசூலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை மாஸ்டர் படம் பிடித்துள்ளது.

6.பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி உயிருடன் தீ வைத்து எரிப்பு

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, உயிருடன் தீ வைத்து கொலை செய்ய முயன்றவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

7.மாடு மேய்த்த மாணவிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோவில் கைது

மாடு மேய்த்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

8.காது கிழிந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை!

காது கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில் திரியும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்று அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

9.மக்கள் மருத்துவர் சாந்தாவிற்கு பல்வேறு கட்சியினர் இரங்கல்

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

10.தொடரை வென்ற இந்திய அணிக்கு குவியும் பாராட்டு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details