தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

By

Published : May 12, 2021, 3:13 PM IST

ஆசிரியர் போல சபாநாயகர் நடுநிலையுடன் நடக்க வேண்டும்' - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

ஆசிரியரைப் போல நடுநிலையோடு பேரவைத் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தினார்.

'மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்’ - அமைச்சர் துரைமுருகன்

நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 33ஆக உயர்த்தி, மக்கள் அளித்த தீர்ப்பை ஒன்றிய அரசு மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வட மாவட்டங்களில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இச்சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(மே12) உயிரிழந்தார்.

மண்ணில் உலவும் தேவதைகள் செவிலியர்கள்.

கரோனா தொற்றுக்குப் பிறகு செவிலியரின் பணி எத்தகைய மதிப்பு வாய்ந்தது என்பதை உலகமே உணரத் தொடங்கியிருக்கிறது. இன்று (மே.12) உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர்களின் அப்பழுக்கற்ற சேவைகளை நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

சென்னை:கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் மெல்ல உயரும் பெட்ரோல் விலை!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும்போது உயராமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

வைரலான சிறுவன் - சிறுமி வீடியோ: குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு விசாரணை

சமூக வலைதளத்தில் சிறுவன்-சிறுமியின் காணொலி வைரலான விவகாரத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அசாமின் முதல் பெண் நிதியமைச்சர் அஜந்தா நியோக்

சமூக நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நான், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனில் கவனம் செலுத்துவேன். ஒடுக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு சமூக நலத் துறை எப்போதும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

’சார்பட்டா பரம்பரை’ நடிகர் கரோனாவால் உயிரிழப்பு!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் துணை நடிகர் மாறன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details