தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - காமராஜர் திருவுருவப் படத்திற்கு மரியாதை

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

By

Published : Jul 15, 2020, 2:58 PM IST

சாத்தான்குளம் கொலை வழக்கு: மனித உரிமைகள் ஆணையத்தின் 2ஆம் நாள் விசாரணை!

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்று (ஜூலை 14) அவர்கள் விசாரணையைத் தொடங்கினர்.

காமராஜர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

புதுச்சேரி: கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கரோனா பரவல்: காரைக்காலில் நகைக் கடைகள் மூடல்!

புதுச்சேரி: கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், காரைக்கால் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் சார்பில் இன்று முதல் ஒருவார காலத்திற்கு நகைக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவு!

சென்னை: நாள்தோறும் காலையில் அனைத்து காவல்துறையினரும் கரோனா விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை - ஒட்டன்சத்திரம் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்!

திண்டுக்கல்: கரோனா தொற்று பரவல் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை இன்று (ஜூலை 15) முதல் ஜூலை 21ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மூடப்படுகிறது.

கரோனா பிரிவில் போதிய வசதிகள் இல்லை! பரவும் காணொலி...

கள்ளக்குறிச்சி அருகே கரோனா தனிப்பிரிவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகள் குற்றஞ்சாட்டும் காணொலிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை செய்தால் கரோனா பிடியிலிருந்து தப்பிக்கலாம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: மக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்த்தால் இன்னும் நான்கு மாதங்களில் கரோனா பிடியிலிருந்து விடுபடலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - முதலமைச்சர் அனுமதி

நோயின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் மூவர் கைது!

திருவனந்தபுரம்: நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details