தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1PM - தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 6, 2021, 1:17 PM IST

1. கோவையில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாள் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. அரசு நெறிமுறைகளைப் பின்பற்றினால் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - அன்பில் மகேஷ்

அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றும்பட்சத்தில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4. கோயில்கள் முன்பு வைக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க நடவடிக்கை!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, கடந்தாண்டு போலவே கோயில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

5. நிபா வைரஸ் - அறிகுறிகள் என்னென்ன?

நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

6. காவல் நிலையத்தில் வைத்து மதபோதகரை தாக்கிய வலதுசாரி கும்பல்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள புரானி பாஸ்தி காவல் நிலையத்தல் வைத்து, மத போதகர் உள்ளிட்ட மூவர் மீது வலதுசாரி செயற்பட்டாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளம் - மோசடி கும்பல் கைது

டெல்லி: புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி இணையதளத்தில் மோசடி செய்து வந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. பஞ்ச்ஷீரை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவிப்பு- முடிவுக்கு வரவுள்ள போர்!

பஞ்ச்ஷீர் மாகாணத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தாலிபான்களை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வந்த பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தேசிய எதிர்ப்பு முன்னணி, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

9. குட்டி பட்டாஸை தொடர்ந்து ஹிட் அடித்த அஸ்வின் பாடல்

நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியான ’அடிபொலி’ பாடலை யூ-டியூப்பில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

10. 'கடவுள் கொடுத்த வரம் நீ' - இறுதியாகக் காதலை ஒப்புக்கொண்ட ஷபானா

செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, தனது காதலை முதல்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details