தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news@ 1PM - news

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 6, 2021, 12:57 PM IST

1. ஒளிப்பதிவு வரைவு மசோதாவை திரும்ப பெறுக - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை (2020 - 2021) திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

2. மதன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

பப்ஜி விளையாடி பெண்களை இழிவாக பேசி, பணம் மோசடியில் ஈடுபட்ட மதன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3. 14 மளிகை பொருள் தொகுப்பில் காலாவதியான டீ தூள்?

கரோனா நிவாரணப்பொருட்களாக அரசு வழங்கிய 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருட்களின் தொகுப்பில், காலவதியான டீ தூள் பாக்கெட்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நியாவிலைக்கடைகளில் கூட்டுறவு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

4. பள்ளிகள் திறப்பு - விரைவில் அறிவிப்பு?

கரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

5. ரஷ்ய விமானம் மாயம்- 28 பேரின் கதி என்ன?

22 பயணிகளுடன் வானில் பறந்த ரஷ்ய விமானம் ஒன்று மாயமானது.

6. தண்ணி காட்டும் தங்கம், ஆறுதல் அளித்த வெள்ளி!

தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.8 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35 ஆயிரத்து 920க்கு விற்பனையாகிறது.

7. ஆக்ஸிஜன் பற்றாக்குறை- இந்தோனேசியாவில் 63 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

8. முத்தத்தில் இத்தனை வகைகளா?

தற்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து கொண்டாடுவது உத்தமம். இல்லை மொரட்டு சிங்கிள்ஸ் 90's கிட்ஸ் பாவம் சும்மா விடாது. இன்று சர்வதேச முத்த தினம். இந்தக் கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் பாதுகாப்பாக முத்தத் தினம் கொண்டாடுவது குறித்து பார்க்கலாம்.

9. சரத்குமார் நடிப்பில் 'இரை' இணைய தொடர்

ராதிகா சரத்குமாரின் 'ராடான் மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் 'ஓடிடி ஒரிஜினல்ஸ்' தளத்திற்காக 'இரை' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 6) காலை பூஜையுடன் தொடங்கியது. இத்தொடரை 'தூங்காவனம், கடாரம் கொண்டான்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் M செல்வா இயக்குகிறார்.

10. 1000 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 617 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details