தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2021, 1:12 PM IST

ETV Bharat / city

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @1PM

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஒரு மணி செய்திச்சுருக்கம்

1. பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பாமக

பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காணொலி மூலம் வெளியிட்டு பேசி வருகிறார்.

2. வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 5) அதிகாலை திறக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

3. நீட் ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு ஜூலை 13க்கு ஒத்திவைப்பு

4. உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?

உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

5. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம்?

மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றும் நாளையும் நடைபெற உள்ள நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6. கல்யாண் சிங் மருத்துவமனையில் அனுமதி!

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7. அமேசான் சிஇஓ பதவியிலிருந்து விலகினார் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (சி.இ.ஓ) பொறுப்பிலிருந்து ஜெஃப் பெசோஸ் இன்று (ஜூலை 5) விலகியுள்ளார்.

8. மேகா நாயகன் அஸ்வின்!

மேகா நாயகன் அஸ்வின், இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

9. இறகுப் பந்தாட்ட விடிவெள்ளி பிவி சிந்து!

சர்வதேச இறகுப் பந்தாட்டம் (பேட்மிண்டன்) அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்து இன்று 26ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

10. கருத்துச் சுதந்திரம் மீது கல்லெறியும் ஒன்றிய அரசு - போர்க்கொடி தூக்கிய படைப்பாளிகள்!

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவுக்கு திரைப்பட படைப்பாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என்று பலரும் எதிர்த்து வருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details