தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச்சுருக்கம் - Top 10 news @ 1PM - ஒரு மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 1, 2021, 1:42 PM IST

1. பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்குப் பருவமழை வருகிற 7ஆம் தேதிவரை தீவிரமடைய வாய்ப்பில்லை. அதன்பின்னர், மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

2. ’அனுமதிக்கப்பட்ட கால அளவைத் தாண்டி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஏற்க முடியாது’

உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ள கால அளவைத் தாண்டி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3. சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது சமையல் சிலிண்டர் விலையும் ரூ. 25 உயர்ந்துள்ளது.

4. இன்று சர்வதேச நகைச்சுவை தினம்

சர்வதேச நகைச்சுவை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

5. ஷாக் அடித்த தங்கம்- ஒரே நாளில் கிடு கிடு!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.37 அதிகரித்து விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில் தங்கத்தின் விலையைப் பார்க்கலாம்.

6. முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக் குறைவு காரணமாக முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7. ’அவமதித்த அமெரிக்காவுடன் இனி கூட்டணி இல்லை’ - பாகிஸ்தான் பிரதமர்

போர் சூழலில் இனி ஒருபோதும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கூட்டணி வைக்காது எனப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

8. இன்று நடிகர் விசு பிறந்தநாள்!

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநரான நடிகர் விசுவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 01) கொண்டாடப்படுகிறது.

9. விஜய்யின் ’பீஸ்ட்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

10. வலிமை படம் குறித்து ’டபுள் அப்டேட்’ : ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் இணைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details