தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - Top 10 news ETV

ஈடிவி பாரத் தமிழ் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm.

Top 10 news @1pm
Top 10 news @1pm

By

Published : Mar 12, 2021, 1:15 PM IST

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியில் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளிட்டார்.

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு உற்சாக வரவேற்பு

கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ குளித்து தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சைதாப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். இதில் ஒருவர் உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா தமிழ் மாநில முஸ்லீம் லீக்?

அதிமுக கூட்டணியில் கடந்த 25 ஆண்டுகளாக இடம் பெற்றிருந்த தமிழ் மாநில முஸ்லீம் லீக் தற்போது கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்- சீமான்

வேலூர்: பசித்து உணவு உண்கின்ற ஒவ்வொருவரும் நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் சாப்பிடாமல் பட்டினி இருங்கள் என தேர்தல் பரப்புரையில் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகி!

கரூர்: கிருஷ்ணராயபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் காமராஜ் திமுகவில் இணைந்தார்.

டூப் ஸ்டாலின் காலில் விழுந்து குறைகளை கூறிய மூதாட்டி!

நாமக்கல்: ராசிபுரம் பகுதியில் 'ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போராரு' என்ற திமுகவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் டூப் ஸ்டாலின் காலில் விழுந்து மூதாட்டி குறைகளை கூறினார்.

புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டி!

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில செயலாளர் வேலு அறிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை: வல்சராஜ்

புதுச்சேரி: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வல்சராஜ் தெரிவித்துள்ளார்.

இது காதலுமல்ல, நட்புமல்ல... எல்லையற்ற பேரன்பு - 5 Years Of Kadhalum Kadanthu Pogum

ஒரு சிலரிடம் வாழ்க்கையில் எந்தவிதமான உறவு முறையும் இருக்காது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒருவித அன்பை, புரிந்துகொள்ளுதலை ஏதோ ஒரு உறவு முறையில் அடைத்துவிட இந்தச் சமூகம் நிச்சயம் நினைக்கும். அதுபோல் இல்லாமல் ஒரு ஆண்-பெண்ணுக்குள் இருக்கும் அன்பை, அன்பாக மட்டுமே எடுத்துச் சென்ற படங்களில் 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details