தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Sep 26, 2020, 1:52 PM IST

காலத்தால் அழிக்க முடியாத அன்பளிப்பு கொடுத்தார் - நடிகர் நாசர் உருக்கம்!

யாருக்கும் குரல் கொடுக்காத எஸ்.பி.பி ‘அதடு’ என்ற தெலுங்கு படத்தில் எனக்கு மட்டும் டப்பிங் கொடுத்தார். காலத்தால் அழிக்க முடியாத ஒரு அன்பளிப்பை எஸ்.பி.பி எனக்கு கொடுத்துள்ளார் என வருத்தத்துடன் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

‘எதைச் சொல்லி உங்கள் இழப்பை ஈடுசெய்யப் போகிறேன்’ - மைக் மோகன் உருக்கம்

சென்னை: எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன் என நடிகர் மோகன் கூறியுள்ளார்.

'நானும் நேரடியாக பாதிக்கப்பட்டேன், மக்கள் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது!'

தருமபுரி: கரோனாவால் பாதிக்கப்பவன் என்ற முறையில் சொல்கிறேன், மக்கள் கரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் மன்மோகன் சிங் - மு.க. ஸ்டாலின்

சென்னை: உலக அளவில் இந்தியாவிற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திய மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

100 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: பருவமழை காலத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 100 அடி நீர்மட்டத்தை மேட்டூர் அணை எட்டியுள்ளது.

குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை

திருநெல்வேலி: குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 மாதத்திற்கு ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவாருங்கள்- எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சித்தராமையா உள்ளிட்ட 25 காங்கிரஸ் முதலமைச்சர் எடியூரப்பா மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

பிகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

டெல்லி: கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கிடையே நடைபெறவுள்ள பிகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முர்ஷிதாபாத்தில் அல்-கய்தாவுடன் தொடர்பிருப்பதாக மேலும் ஒருவர் கைது!

மேற்கு வங்கம்: முர்ஷிதாபாத்தில் அல்- கய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபரை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நாவின் யு.என்.ஐ.ஏ.டி.எஃப் விருதைப்பெற்றது கேரள அரசு!

திருவனந்தபுரம் : தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் வகையில் ஐ.நா சபை ஊடாடும் பணிக்குழு தனது யு.என்.ஐ.ஏ.டி.எஃப் விருதை கேரள அரசுக்கு வழங்கி மாண்பளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details