தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @1pm
Top 10 news @1pm

By

Published : Sep 21, 2020, 1:24 PM IST

'தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலம்கூட பாதிக்கப்படவில்லை'

டெல்லி: மழை வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலம்கூட பாதிக்கப்படவில்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்தது இந்தியாவில்தான் - சுகாதாரத் துறை

டெல்லி: உலகிலேயே கரோனா தொற்றிலிருந்து அதிக நபர்கள் குணமடைந்தது இந்தியாவில்தான் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துணைத்தேர்வுகள் தொடக்கம்!

சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

லயன் டேட்ஸ் பேரிச்சம்பழத்தில் எலியின் கழிவுகள் - பாதிக்கப்பட்டவர் அளிக்கும் அதிர்ச்சிகரத் தகவல்!

ஈரோடு: பிரபல லயன் டேட்ஸ் நிறுவனத்தின் பொட்டலத்தில் எலிக் கழிவுகள் இருந்ததைக் கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.

'சாயக்கழிவு ஆலை உரிமத்தை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும்'

சென்னை: கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி கொலை வழக்கு: அதிமுக பிரமுகர் சரணடைந்தார்

சென்னை: வாலிபர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

தானே கட்டட விபத்து: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்!

பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக இன்று(செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி இதுவரையில் 10 பேர் உயிரிழந்ததாக தானே மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பையை சேகரித்து கிடைத்த பணத்தில் தனக்குத் தானே சிலை வைத்த ஆச்சரிய மனிதர்!

வருமானத்திற்காக 25 ஆண்டுகளாக தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகள், கீழே கிடக்கும் மது பாட்டில்களை சேகரித்து அவற்றை விற்று பிழைப்பு நடத்திவரும் ஒருவர், தான் சேமித்து வைத்திருந்த பணத்தினைக் கொண்டு தனக்குத்தானே சிலை வடிவமைத்து நிறுவியுள்ளார்.

நடிகர் உதயாவின் "செக்யூரிட்டி" குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்!

ஃபோர்ட்பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில், 20 நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் ஃபிலிமாக உதயாவின் "செக்யூரிட்டி" குறும்படம் தேர்வாகியுள்ளது.

'விவசாயிகளிடம் பொய் கூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ப. சிதம்பரம்

டெல்லி: மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் உடனயாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details