தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 1  PM
Top 10 news @ 1 PM

By

Published : Jul 13, 2020, 1:05 PM IST

வெளியான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு ரிசல்ட்!

12ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகளை இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டது. cbscresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுமுடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு: புதிய அப்டேட்

நாட்டில் கரோனா பாதிப்பாளர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்துக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

டெல்லி: பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாக உரிமை திருவாங்கூர் அரச குடும்பத்திற்கே சேரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவல் துறையினருக்கு மனநலப் பயிற்சி: எஸ்பி சக்தி கணேஷ் அறிவிப்பு!

நாமக்கல்: பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பொதுமக்களுடன் சுமூகமாக செல்வதை ஊக்குவிக்கும் வகையில் மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படும் என மாவட்ட புதிய எஸ்.பியாக பொறுப்பேற்று கொண்ட சக்தி கணேசன் தெரிவித்தார்.

தட்டிக்கேட்டவரின் மண்டையை உடைத்த இளைஞர்கள்

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்ட இந்து முன்னனி நகரச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கால் வருமானம் பாதிப்பு:கடனை கட்ட முடியாமல் டாக்சி ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை

நாகப்பட்டினம்: கரோனா ஊரடங்கு காரணமாக கடனை கட்ட முடியாமல் தவித்த டாக்சி ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமண ஆசைக் கூறி சிறுமிக்கு பாலியல் கொடுமை!

மதுரை: அலங்காநல்லூர் அருகேயுள்ள கிராமத்தில் சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி பாலியல் கொடுமை செய்த இளைஞரை சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேற்குவங்கம்: பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அமெரிக்காவிடமிருந்து மீண்டும் 72 ஆயிரம் சிக் 716 ரக ரைஃபிள் வாங்கும் இந்தியா!

டெல்லி: ஏற்கெனவே அமெரிக்காவிடமிருந்து 72 ஆயிரம் துப்பாக்கிகள் வாங்கிய நிலையில், மீண்டும் 72 ஆயிரம் சிக் 716 ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

66ஆவது வயதில் அடியெடுத்துவைக்கும் கவிப்பேரரசு

கவிஞர் வைரமுத்து இன்று தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details