தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச்சுருக்கம் TOP 10 news @11AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச்சுருக்கம்..

காலை 11 மணி செய்திச்சுருக்கம்
காலை 11 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 5, 2021, 11:28 AM IST

1. வ.உ.சி உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதலமைச்சர்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

2. சென்னை அருகே விபத்து: 5 இளைஞர்கள் உயிரிழப்பு

பெருங்களத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்த இளைஞர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

3. கரூரில் நல்லாசிரியர் விருதுக்கு பத்து ஆசிரியர்கள் தேர்வு..!

கரூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதிற்காக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

4. மீண்டும் நிபா: கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப். 5) காலை உயிரிழந்தான்.

5. அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா!

அன்னை தெரசா அவர்கள் மக்களின் மனதில் அன்போடும், கருணையோடும் போற்றபடுபவர். இவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.

6. நாட்டின் விடுதலைப் போரில் ஜமீன்தார்களும், மன்னர்களும்!

சுரேந்திர சாயைப் போலவே, ஆங்கிலேயர்களும் சோனகானின் நில உரிமையாளரான நாராயண் சிங் சரணடையும் பொருட்டு கிராம மக்களைத் துன்புறுத்தத் தொடங்கினர்; கிராமத்தை தீக்கிரையாக்கினர். தனது அன்புக்குரியவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கண்டு, மனம் தாங்காத வீர நாராயண் சிங் சரணடைந்தார்.

7. 11 வயது சிறுமி உயிரிழப்பு; பிகாரில் மூன்றாவது அலை?

கோவிட் பெருந்தொற்று மூன்றாவது அலை குறித்து தேசிய பேரிடர் குழு நிறுவன வல்லுநர்கள் எச்சரித்துவரும் நிலையில் பிகாரில் 11 வயது சிறுமி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8. 10ஆம் வகுப்பு பாஸான 86 வயது மு. முதலமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா 10ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றார். தற்போது அவருக்கு வயது 86 ஆகிறது.

9. PARALYMPICS: இந்தியாவுக்கு 5ஆவது தங்கம்; அசத்திய கிருஷ்ணா நாகர்

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்ஹெச்-6 பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் ஐந்தாவது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

10. தலைவி அரசியல் படம் இல்லை - விஜய் விளக்கம்

தலைவி அரசியல் திரைப்படம் இல்லை; ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் மட்டுமே என இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details