தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

By

Published : Jul 27, 2021, 11:10 AM IST

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்

1. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்- மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 27) மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2. வரதட்சணை கொடுமை பெண் தீக்குளிக்க முயற்சி

வரதட்சணை கொடுமை விவகாரத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பட்டதாரி பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. பாஜக வேட்பாளர் மோசடி வழக்கில் கைது

பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக்கூறி வங்கியில் ரூ. 92 லட்சம் பண மோசடி செய்து தலைமறைவான நபரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

4. திமுக நிர்வாகி அடித்து கொலை - காய்காறி வியாபாரி கைது

நீலகிரியில் திமுக நிர்வாகியை அடித்துக் கொலை செய்த காய்கறி வியாபாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

5. மக்கள் குறைதீர்க்கும் அறையில் சங்கர் ஜிவால் திடீர் ஆய்வு

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறக்கூடிய அறையை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

6. டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி- பிரதமருடன் சந்திப்பு!

மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், முதல்முறையாக டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி.

7. பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சி. கிடுக்கிப்பிடி!

இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் யார் அந்த இந்திய வாடிக்கையாளர் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

8. ஓமனிலும் நீட் தேர்வு மையம் வேண்டும் - பெற்றோர் கோரிக்கை

இந்தியாவிற்கு செல்ல விமான சேவை இல்லாததால் நீட் தேர்வு எழுத ஓமனில் தேர்வு மையம் அமைக்க வேண்டி இந்திய அரசிடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9. ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி , ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

10. வெளியானது "நவரசா" ட்ரைலர்!

மணிரத்னம் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

ABOUT THE AUTHOR

...view details