தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am

Top 10 news @11am
ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

By

Published : Jan 4, 2021, 12:02 PM IST

திருமணத்தை மீறிய உறவு - கணவனை திட்டமிட்டு கொலைசெய்த மனைவி!

சிதம்பரம் அருகே திருமணத்தை மீறிய உறவினால் கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலையாளத்தின் மூத்தக் கவிஞர், பாடலாசிரியர் அணில் பனச்சூரான் காலமானார்

கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட மலையாளத்தின் மூத்தக் கவிஞர், பாடலாசிரியர் அணில் பனச்சூரான் காலமானார்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து, நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள்

டெல்லியிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாகப் பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.

சென்னை உயர் நீதிமன்ற 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு!

சென்னை உயர் நீதிமன்ற 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இன்று (ஜனவரி 4) ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்றார்.

தேர்தல் முடிவை மாற்ற அலுவலரை மிரட்டிய ட்ரம்ப் - அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒலிப்பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அலுவரிடம் தேர்தல் முடிவை மாற்றக் கோரும் ஒலிப்பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அரசியலில் சேர கங்குலிக்கு நெருக்கடி'- சிபிஐ

அரசியலில் இணைய கங்குலிக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது என்று சிபிஐ தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 வருடங்களாக சாக்கடை அருகே வசித்து வரும் மக்கள் - கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் இருக்கும் பேரூராட்சி!

நன்னிலம் அருகேயுள்ள பேரளம் பேரூராட்சியின் அலட்சியத்தால் 20 வருடங்களுக்கு மேலாக சாக்கடை அருகே கிராம மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

வருகிற 14ஆம் தேதி சென்னை வருகிறார் அமித் ஷா!

வருகிற 14ஆம் தேதி அமித் ஷா மீண்டும் சென்னை வருகிறார். அன்றைய தினம் அவரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

எம்ஜிஆர் திறந்துவைத்த கே.ஆர் கலையரங்கம் புதுப்பொழிவு பெறுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் திறந்து வைக்கப்பட்ட கே ஆர் கலையரங்கம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதால் அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'பரியேறும் பெருமாள் இனி மானுட சமூகத்தின் பிரதி'

என்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 'பரியேறும் பெருமாள்' படம் பற்றி இடம்பெற்ற கேள்வி குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details