தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @11am
11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Nov 20, 2020, 11:34 AM IST

’சட்டப்பேரவை தேர்தலில் தமாகா போட்டி’

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பலத்துக்கு ஏற்றவாறு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

'எளிய நிதி சேவை புதிய தொழில்களை உருவாக்கும்' - சி. பொன்னையன்

தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும், துரிதப்படுத்த, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான எளிய நிதி சேவை, புதிய தொழில்களை நிறுவுவதற்குச் சாத்தியமாக்கும் என சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

'அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும்'

7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டின் வழியே தனியார் மருத்துவக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வண்டி சக்கரத்தில் மயங்கி விழுந்த முதியவர்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!

புஞ்சை புளியம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயக்கமடைந்து சிறிய ரக சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவிட் தடுப்பூசி சோதனை; தன்னார்வலராக முன்வந்த ஹரியானா அமைச்சர்!

கோவிட் தடுப்பூசி சோதனைக்கு ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தன்னார்வலராக முன்வந்துள்ளார். அவரது உடலில் இன்று காலை 11 மணிக்கு கோவிட் தடுப்பூசி மருந்து செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மீளுமா காங்கிரஸ் - ஓர் அலசல்

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழலில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த காரசார விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. இவ்வேளையில் காங்கிரஸ் கட்சியின் பலம், தேர்தல் வியூகம், கூட்டணி முடிவுகள் குறித்த விவரங்களை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி

விக்கிரவாண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். முத்தமிழ் செல்வனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நான்காவது மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நள்ளிரவு முதல் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூபாய் 25 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பைடன், கமலா ஹாரிஸை பாராட்டிய பில்கேட்ஸ்

அமெரிக்க அதிபர், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸின் குழு அமெரிக்க மக்களுக்கான நல்ல கூட்டணி என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கார் மீது கல்வீச்சு

காங்கிரஸ் பிரமுகர் காரின் மீது அடையாளம் தெரியாத கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது அறிந்து, அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details