தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - ETVBharat Top 10

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-11am
top-10-news-at-11am

By

Published : Sep 26, 2020, 11:29 AM IST

ரூ.28,000 கோடி மோசடி - பிரபல நிதி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

சென்னை: மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல நிதி நிறுவனம் 28,000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சிபிசிஐடி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்பிபி நேற்று (செப். 25) சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். இது தொடர்பாக தனது இரங்கலை சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி.பி உடல் நல்லடக்க நிகழ்வுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர்!

திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் நல்லடக்க நிகழ்வுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

கதறி அழுத 'பாடகர் மனோ'

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு பாடகர் மனோ கதறி அழுது அஞ்சலி செலுத்தினார்.

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு : 12 வாரத்தில் வழக்கை முடிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அயனாவரம் ரவடி சங்கரின் வழக்கை 12 வாரத்தில் முடிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவரை இடை நீக்கம் செய்த மருத்துவ கவுன்சிலின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது!

சென்னை : பொதுவில் வெளியிட அனுமதியில்லாத உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட மருத்துவரின் இடை நீக்கத்தை ரத்து செய்த மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எதிர்க்கட்சியினரின் பொய் பரப்புரைக்கு எதிராக விவசாயிகளை அணுக வேண்டும்: பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் செய்யப்படும் பொய் பரப்புரையை முறியடிக்க விவசாயிகளை அணுக வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மோடி அரசை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை: ராகுல் காந்தி

டெல்லி: விவசாயிகளுக்கு மோடி தலைமையிலான அரசு மீது ஒரு துளிக்கூட நம்பிக்கை இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதி அமைப்புகள் பரப்புகின்றன - இந்திய தூதர் பவன் பாதே

டெல்லி: கரோனா கால கட்டத்தை பயன்படுத்தி தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதிகள் அமைப்புகள் பரப்புவருவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது அமர்வில் இந்திய தூதர் பவன் பாதே தெரிவித்துள்ளார்.

அந்தாதூன் ரீமேக் படத்தில் நடிக்கும் தமன்னா!

நடிகை தமன்னா தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் அந்தாதூன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details