தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.
ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Jul 21, 2020, 11:07 AM IST

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு

லக்னோ: மத்தியப் பிரேதச ஆளுநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லால்ஜி டாண்டன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

இந்தியாவில் சமூக பரவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை - எய்ம்ஸ்

டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலை பயிர்சாகுபடியை வளர்த்தெடுக்க ஊக்கத்தொகை திட்டம் - தமிழ்நாடு அரசு

சென்னை: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு!

சென்னை: கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள கல்வி இயக்குநரகம் தெலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

பக்தர்கள் இல்லாமல் நடந்த அழகர்கோயில் ஆடி அமாவாசை திருவிழா!

மதுரை: அழகர்கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருதல், பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமிக்கு சந்தனம் சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி: விவசாயிகள் வேதனை

திருப்பூர்: தாராபுரம் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மறி ஆடுகள் பலியாகின.

வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் மரணம்!

திருப்பத்தூர்: ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று (ஜூன் 21) அதிகாலை உயிரிழந்தார்.

மலபார் கடற்படை கூட்டு பயிற்சிகளில் சேர இந்தியா ஆஸ்திரேலியாவை அழைக்க வாய்ப்பு

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான விரிவான தேசிய திறனை, பொருளாதார-நிதி குறியீடாகவோ அல்லது ராணுவ தொழில்நுட்ப வலிமையாகவோ இருந்தாலும், மிகவும் உறுதியான ‘பலமிக்கது’ என்று ஒப்பிடும்போது கடல் சார்ந்த ஒரு களத்தை தவிர, மற்றவை பெய்ஜிங்கிற்கு சாதகமாகவே உள்ளது.

ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து மருத்துவர்கள் அமைதிப்போராட்டம்!

புதுச்சேரி: மருத்துவப் பணியாளர்களை கடுமையாக திட்டிய ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து மருத்துவர்கள் நேற்று (ஜூன் 20) கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details