தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @11 am - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 30, 2021, 11:21 AM IST

1. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு? மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடியும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

2. ’சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை கோரி எம்பிக்கள் குரல் எழுப்ப வேண்டும்’

உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைய தமிழ்நாடு எம்பிக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

3. உயிரைப் பறிக்கும் தண்ணீர் லாரிகள் - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

பெரம்பலூர் அருகே கிரஷர் நிறுவனத்திற்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்ததால், ஆவேசமடைந்த கிராம பொதுமக்கள் பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

4. ஆடி வெள்ளி., மாங்கல்ய பூஜை சிறப்புகள்!

கோடி மாதங்கள் இருந்தாலும் ஆடிபோல் வருமா என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். மாதங்களில் ஆடி மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடியிலும் வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது.

5. 2 மணிக்கு சிபிஎஸ்இ ரிசல்ட்!

இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்இ ரிசல்ட் வெளியாகிறது.

6. ’அடையாளம் தெரிந்தே தானிஷை கொலை செய்த தலிபான்கள்’ - அமெரிக்க ஊடகம் அறிக்கை!

புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் தவறுதலாக கொல்லப்படவில்லை என்றும், அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தலிபான்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் எனவும் அமெரிக்க தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

7. 44 ஆயிரமாக திடீரென உயர்ந்த கரோனா பாதிப்பு!

கரோனா பரவலின் மூன்றாம் அலை ஆகஸ்ட் இறுதியில் ஏற்படக்கூடும் என முன்னறிவித்துள்ள நிலையில் இன்று நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 44, 230 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

8. இன்றைய தங்கம் விலை நிலவரம்

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஜூலை 30) சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, 36,496-க்கும், ஒரு கிராம் ரூ. 4,562-க்கும் விற்பனையாகிறது.

9. குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சோனு சூட்!

நடிகர் சோனு சூட் தனது 48ஆவது பிறந்தநாளை இன்று குடும்பத்துடன் மும்பையில் கொண்டாடினார். கரோனா நெருக்கடி காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவி செய்தவர் சோனு சூட். இவர் நடிகர், மாடல், தயாரிப்பாளர் மட்டுமின்றி மனிதாபிமான உதவிகளாலும் பெரிதும் அறியப்படுகிறார்.

10. தேனீ நாயகன் சென்றாயன்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து, தனது நகைச்சுவை திறனால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர் சென்றாயன் இன்று (ஜூலை 30) தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details