தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM - top 10 news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

top 10 news @ 11 Am
top 10 news @ 11 Am

By

Published : Jul 17, 2021, 11:20 AM IST

1) இந்தியாவில் 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 79 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2) பிறந்தது ஆடி, குறைந்தது தங்கம்

பொதுவாக ஆடி என்றாலே ஷாப்பிங் விரும்பிகளுக்கு கொண்டாட்டம்தான். பற்பல சலுகைகளுடன் துணிக் கடைகளில் விற்பனை களைகட்டும். கூட்டமும் நிரம்பி வழியும்.

3) ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாம் அலை!

ஆகஸ்ட் இறுதியில் கோவிட் மூன்றாம் அலை தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் கூறினார்.

4) சுண்ணாம்பு துண்டுகளில் தேசிய கீதம் - சாதனை படைத்த இளைஞர்

சுண்ணாம்பு துண்டுகளில் தேசிய கீதத்தை உருவாக்கிய இளைஞர் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு காணொலி.

5) கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு- பகீர் சிசிடிவி காட்சிகள்!

விருதுநகரில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை சிசிடிவி மூலம் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

6) காவல் சீருடையில் கொள்ளையடித்த 9 பேர் கைது; ரூ.32 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு காவலர் சீருடையை அணிந்து தொழிலதிபரிடம் கொள்ளையடித்த 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.32 லட்சம் பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

7) தமிழ் சினிமாவின் ராட்சசனுக்கு பிறந்த நாள்!

கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டு பின்னாள்களில் சினிமா கதநாயகன் ஆனவர்தான் விஷ்ணு விஷால். இவர் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தமிழ்நாட்டின் வேலூரில் 1984ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.

8) மரணக் கிணறு உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு

மத்தியப் பிரதேசத்தில் கிணறு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

9) நெல்லையில் ரவுடியிசத்தை ஒழிக்க 5 தனிப்படை அமைப்பு: எஸ்பி அதிரடி நடவடிக்கை

நெல்லையில் ரவுடியிசத்தை ஒழிக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகளை அமைத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

10) டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா... ரசிகர்கள் உற்சாகம்!

டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details