தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - TOP 10 NEWS at 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 AM
11 AM

By

Published : Apr 16, 2021, 11:36 AM IST

1. கரோனா 2 ஆவது அலை: தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம்

சென்னை: கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகமெடுத்துள்ள நிலையில், மீண்டும் தீவிரமாகக் களத்தில் இறங்கிய இந்திய மருத்துவம் குறித்த செய்திச் தொகுப்பு.

2. ஜமின் பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயற்சி: ஐவர் கைது

சென்னை: ஜமின் பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

3.வீடு புகுந்து துணிகர கொள்ளை: 35சவரன் தங்க நகை திருட்டு!

சென்னை: வீட்டில் ஆள் இருந்த போதே 35 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு கரோனா!

இந்தியாவில் ஒரேநாளில் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 353 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது

கடந்த ஏழு வாரங்களாக விடாப்பிடியாக அலையடித்துக் கொண்டிருக்கும் கோவிட் உலகத்தொற்றைப் பற்றியும், அதனால் உயர்ந்துகொண்டே இருக்கும் பலி எண்ணிக்கைப் பற்றியும் உலகச் சுகாதார அமைப்பு (WHO) திகில் கிளப்பியிருக்கிறது.

6. காவலரை தாக்கிய வீடியோ வைரல்

டெல்லி உத்தம் நகர் பகுதியில் கடந்த 14 நாட்களுக்கு முன்பு டெல்லி காவலரை, காவல் உடையில் அடையாள தெரியாத நபர் ஒருவர் கடுமையாக தாக்கி உள்ளார். காவலர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

7. பழிதீர்க்கும் நோக்கில் திமுக ஒன்றியக் கவுன்சிலர் கொலை: மூவர் கைது!

விருதுநகர்: நண்பனை கொலைசெய்த திமுக ஒன்றியக் கவுன்சிலரை ஓராண்டு காத்திருந்து அரிவாளால் வெட்டிக் கொன்ற மூவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

8. குடியாத்தம்: வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வனப்பகுதியில் விடுவிப்பு

வேலூர்: குடியாத்தத்தில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை, சுமார் 10 மணி நேரம் போராடி வனத் துறையினர் பிடித்தனர். அங்கு பிடிபட்ட சிறுத்தையை சாரங்கல் வனப்பகுதியில் விடுவித்தனர். வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில், மூன்று பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

9. கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாங்க - தம்பதிக்குப் பாராட்டு

டேராடூன்: கரோனா நெகட்டிவ் (எதிர்மறை) சான்றிதழுடன் திருமணத்திற்கு வாருங்கள் என திருமண அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்தது வரவேற்பைப் பெற்றுள்ளது.

10. பிஎம்-கேர்ஸ் நிதியில் மேலும் 100 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை!

டெல்லி: கரோனா பரவல் அதிகரிப்பால், பிஎம்-கேர்ஸ் நிதியின்கீழ் மேலும் 100 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details