தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 14, 2021, 11:43 AM IST

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம்TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

1. 'தமிழ்ப் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!' - மோடியின் புத்தாண்டு வாழ்த்து

டெல்லி: உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைப் பகிர்ந்துகொண்டார்.

2.தமிழ்ப் புத்தாண்டு: ஜில்லுடன் ஜோ பைடனின் மனம் குளிர்ந்த வாழ்த்து!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழர்களுக்குத் தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

3.'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு

விருதுநகர்: தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவது பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் தரம் தாழ்ந்த அரசியலைக் காட்டுகிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தாக்கிப் பேசியுள்ளார்.

4.சித்திரைத் திருவிழாவுக்குத் தடை: மதுரை மல்லிகை விலை வீழ்ச்சி

மதுரை: உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா கரோனா பெருந்தொற்று காரணமாகத் தடைசெய்யப்பட்டதால் மதுரை மல்லிகை விலை கிலோ ரூபாய் 400 ஆக குறைந்துள்ளது என வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

5.கட்டுப்பாடுகளை விதிக்க காரணம் உயிர்களை காப்பாற்றுவதே - உத்தவ் தாக்கரே

நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தின் ஒருவராகக் கருதுகிறீர்கள். உங்கள் நலனுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்க ஒரே காரணம் உயிர்களைக் காப்பாற்றுவதே. தயவுசெய்து இதைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கவும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

6.சித்திரை கனி முன்னிட்டு பழங்கள் விற்பனை அமோகம்!

ஈரோடு: சித்திரை கனியை முன்னிட்டு பழங்கள் விலை அதிகரித்துள்ளது.

7.’ஸ்புட்னிக் V’ இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அனுமதி

’ஸ்புட்னிக் V’ தடுப்பூசி தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும், அதனை விநியோகம் செய்யவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) டாக்டர் ரெட்டி ஆய்வகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

8.நிலத்தை அபகரிக்க காவலர் உடையில் சென்று மூதாட்டியிடம் தகராறு செய்தவர் கைது

சென்னை: நிலத்தை அபகரிக்கத் திட்டம் தீட்டி காவல் ஆய்வாளர் உடையில் சென்று மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

9.உசைன் போல்ட்டை விஞ்சிய கர்நாடக சாகசக்காரன்

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா எருமை மாட்டுப் பந்தயத்தில் புகழ்பெற்ற ஒலிம்பிக் வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை சாமானிய இளைஞரான ஸ்ரீநிவாச கவுடா என்பவர் 100 மீட்டர் எருமை மாட்டுப் பந்தயத்தில் முறியடித்துவிட்டார்.

10.'கர்ணன்' திரைப்படம் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும். மறுக்கப்பட்ட உரிமைகளையும் மிகைப்படுத்தாமல் எடுக்கப்பட்ட படம் 'கர்ணன்' என உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details