தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 AM
11 AM

By

Published : Apr 5, 2021, 10:45 AM IST

1. பேரவைத் தேர்தல் 2021: வாக்காளர்களே இது உங்களுக்கான அறிவுரைகள்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

2. 'தட்டுகளைத் தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்பது வெற்று யோசனை'

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

3. சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4. வங்க தேசத்தில் இடியுடன் கூடிய கனமழை: 8 பேர் பலி

டாக்கா: கெய்பந்தா மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில், மூன்று பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

5. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தடுப்பூசி

உத்தரப் பிரதேசம்: லக்னோவில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

6. கரோனா பரசோதனைக்காக 2000 ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இந்தியா முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

7. ’பெரியாருக்கு பதிலாக மோடியை ஏற்றதா அதிமுக தலைமை?’ - ப.சிதம்பரம் கடும் கண்டனம்

தந்தை பெரியாருக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக் கொண்டுவிட்டனரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

8. இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 55 பேர் பலி, பலர் மாயம்

கிழக்கு இந்தோனேசியாவில் பெய்த கன மழை, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

9. பிரெஞ்ச் ஓபன் 2021 டென்னிஸ் - ஒத்தி வைக்க வாய்ப்பு ?

பாரிஸ்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ரோக்சனா மரசினானு தெரிவித்துள்ளார்.

10.ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை

டெல்லி: ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ், இரண்டு நாள் பயணமாக இன்று (ஏப்ரல்.05) இந்தியா வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details