தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ.

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ.

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM
11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

By

Published : Feb 8, 2021, 11:04 AM IST

1.உடனுக்குடன்: தமிழ்நாடு வந்தடைந்த சசிகலா

காரில் அதிமுக கொடியுடன் தமிழ்நாடு வந்தடைந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்று அளித்துவருகின்றனர்.

2.ஆப்கானுக்கு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பிவைத்த இந்தியா

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் ஐந்து லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

3.ஈரான் மீதான பொருளாதாரத் தடை தொடரும் - பைடன் திட்டவட்டம்

ஈரான் மீதான தடையை உடனடியாக நீக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

4.'கல்வி உயர் பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்கள்'

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அதனைக் கண்டித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கல்வி உயர் பணி வாய்ப்புகளில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்தார்.

5.பிரேசிலில் சிலிண்டர் வெடித்து நால்வர் மரணம், 2 பேர் படுகாயம்

பிரேசிலின் நடால் நகரில் கேஸ் சிலிண்டர் (எரிவாயு உருளை) வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளன.

6.பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு

வரும் 2021-22ஆம் நிதியாண்டில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7.போலி இரிடியம் விற்க முயற்சி: 11 பேர் கொண்ட கும்பல் கைது!

விருதுநகர்: போலி இரிடியத்தைப் பதுக்கிவைத்து விற்க முயன்ற 11 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

8.கன்னிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கன்னிவெடி வெடித்ததில் உயிரிழந்தார்.

9.டெல்லி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: சண்டிகரைச் சேர்ந்த 60 வயது நபர் கைது!

டெல்லி: குடியரசு நாளன்று விவசாயிகள் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவகாரத்தில் சண்டிகரைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

10.அறிமுக போட்டியில் இரட்டை சதம்; வங்கதேசத்தின் வெற்றியைப் பறித்த கெய்ல் மேயர்ஸ்!

வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details