தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - சிறுமிக்கு பாலியல் தொல்லை

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 23, 2020, 10:55 AM IST

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

70 விழுக்காடு மானியத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்புசெட்டுகள் - தமிழ்நாடு அரசு

சென்னை: 70 விழுக்காடு மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டுகள் வழங்குவதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பேய்குளம் மகேந்திரன் வழக்கு: சிபிசிஐடி போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி: சட்டவிரோத காவலில் பேய்குளம் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கத்தினா குத்துவேன்: பட்டா கத்தியுடன் பெண்களை மிரட்டிய கொள்ளையர்கள்

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டிய கொள்ளையர்கள், வீட்டினுள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஸ்ஸாமில் நான்கு மாத குழந்தையை விற்ற தந்தை கைது

கோக்ராஜர் (அஸ்ஸாம்): நான்கு மாத குழந்தையை 45 ஆயிரத்திற்கு விற்ற தந்தை, இரு தரகர்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெள்ளம் பாதித்த அஸ்ஸாமுக்கு முதல்கட்ட நிதியாக ரூ. 346 கோடி ஒதுக்கீடு

கவுஹாத்தி: கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநிலத்திற்கு முதல்கட்ட நிதியாக ரூ. 346 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர் பணி நீக்கம்!

காஷ்மீர்: ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட சுமித் குமார் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை காப்பாற்றுங்கள்; 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி பத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

சீனாவின் இடத்தை இந்தியாவால் நிரப்ப முடியும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

வாஷிங்டன்: உலக நாடுகளிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அரங்கில் சீனாவின் இடத்தை நிரப்ப முடியும் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

ABOUT THE AUTHOR

...view details