தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10amTOP 10 News @10 AM - 10 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ..

Top 10 news
Top 10 news

By

Published : Jun 1, 2020, 10:08 AM IST

போராட்டம் நடத்தும் சூழலை பாஜக அரசு ஏற்படுத்த வேண்டாம் - திமுக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் எச்சரிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசுகள் கடைபிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லை என்றால், நாடு முழுவதும் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த கோயம்பேடாக மாறும் அபாயத்தில் காசிமேடு?

காசிமேட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், அடுத்த கோயம்பேடாக, அப்பகுதி மாறி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

டெல்லியில் பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் கைது!

டெல்லியில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

உடுமலையில் தனியார் சேவை அமைப்பு சார்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி, ஒலிபெருக்கி ஆகியவற்றை வழங்கினார்.

சைரஸ் மிஸ்திரியின் பங்கு விவகாரம்: டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு சேர வேண்டிய பங்குகளை வழங்க வேண்டும் என அந்நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'புகையிலையை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்' - ஹர்ஷ் வர்தன்

புகையிலைப் பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

'பிரதமரின் பாராட்டால் எனக்குப் பெருமையே' - மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நெகிழ்ச்சி!

நாட்டின் பிரதமரே, எனது சேவையைப் பாராட்டியது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் மகிழ்ச்சி மட்டுமல்ல; பெருமையாகவும் உள்ளது' என்று முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நெகிழ்ச்சியடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சமோசாக்களை பகிர விரும்பும் வெளிநாட்டுப் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு ஆண்டு கால ஆட்சி, சிறப்பாக திகழ்ந்ததாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புகழாரம் தெரிவித்துள்ளார்.

வில்லனுடன் ரொமான்ஸ் செய்யும் வொண்டர் வுமன்!

நடிகை கால் கடோட் , 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

சச்சினை மீண்டும் சவாலுக்கு இழுத்த யுவராஜ் சிங்!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், தனது ட்விட்டரில் மீண்டும் சச்சின் டெண்டுல்கருக்கு சவால் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details