தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்ககம் TOP 10 NEWS @ 1 PM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்ககம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்ககம்

By

Published : Sep 25, 2021, 1:20 PM IST

1. 'சொன்னதை செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்'- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்தும், கடந்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

2. பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3. ‘திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது’ - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4. தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அலுவலர்கள் டிஜிபியாக பதவி உயர்வு!

தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அலுவலர்களுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து உள்துறைச் செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காவல் துறை தலைவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

5. ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும் - ஜெயக்குமார்

பள்ளிக்கு செல்லும் மாணவனை போல் ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

6. நீதிமன்ற துப்பாக்கிச் சூடு கவலை அளிக்கிறது - தலைமை நீதிபதி ரமணா வேதனை

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

7. வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுவடையும் என நம்பப்படுகிறது.

8. ரஜினியின் தாய் மாமன் யார் தெரியுமா?

அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் தாய்மாமன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

9. எஸ்பிபியின் நினைவு நாள்: பாடும் நிலா மறைந்து ஓராண்டு நிறைவு!

மரணம் எல்லோருக்கும் வரும்.அதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் சாதனையாளரின் மறைவு, இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும் பேரிழப்பு. அப்படிப்பட்ட இழப்புகளை இந்த கரோனா தந்துவிட்டு சென்றது.

10. 'சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்'- கமல்ஹாசன்

எஸ்.பி.பி நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details