தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 13, 2021, 1:03 PM IST

1. ‘உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

2. நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

3. நீட் தேர்வு... உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க முடியுமா? இபிஎஸ் கேள்வி

சென்னை: நீட் தேர்வு நடத்த வேண்டுமென்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதனை எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

4. கோடநாடு வழக்கு - யாரும் தப்ப முடியாது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கோடநாடு வழக்கிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.

5. மாநில மொழிகளில் அவசரகால அறிவிப்பு: விமான போக்குவரத்துத் துறை விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்குமாறு எழுப்பப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்குமாறு விமான போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. நகைக்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி எனவும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

7. பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

பட்டுப்புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது எனவும் இதுகுறித்து முதலமைச்சர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

8. நீட் தேர்வு - தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்

தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

9. US OPEN: ஜோகோவிச் கனவு நொறுங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், இரண்டாம் நிலை வீரர் டேனியல் மெட்வெடேவ் 3-0 என்ற நேர் செட் கணக்கில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

10. சூப்பர் ஸ்டாரை அடுத்து காட்டுக்குள் செல்லும் நடிகர்

டிஸ்கவரி தொலைக்காட்சியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பக்கேற்க பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் தேர்வாகியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details