தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1 PM - தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 1, 2021, 12:59 PM IST

1. ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா ஆறுதல்

சென்னை: ஓ. பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு சசிகலா நேரில் சென்று பன்னீருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

2. சிலிண்டர் விலை உயர்வு - மக்கள் கவலை

சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

3. இறைவா ஓபிஎஸ்ஸுக்கு சக்தி கொடு - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

4. ஓபிஎஸ் மனைவி மறைவு - தமிழிசை இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

5. உச்சத்தில் மது விலை - மதுப்பிரியர்கள் சோகம்

தமிழ்நாட்டில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை 10 ரூபாயிலிருந்து, 500 ரூபாய்வரை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

6. ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை செப்டம்பர் 15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

7. திறக்கப்பட்டன பள்ளிகள் - மாணவர்கள் உற்சாகம்

தமிழ்நாடு முழுவதும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன.

8. உலக கடிதம் எழுதும் நாள் - இன்றிலிருந்து கடிதம் எழுதத் தொடங்குங்கள்

உலக கடிதம் எழுதும் நாளான இன்று உங்கள் அன்பானவர்களுக்கு கடிதம் எழுதத் தொடங்குங்கள். கடிதம் எழுதுவதில், கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அலாதியானது.

9. தங்கம் வெல்லாதது வருத்தம் - டோக்கியோவில் இருந்து மாரியப்பன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லாதது வருத்தம் அளிப்பதாக டோக்கியோவில் இருந்து பேட்டியளித்த மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

10. ஒரேநாளில் சுந்தர். சி பாடல் செய்த சாதனை

'அரண்மனை 3' படத்தில் உள்ள ’ரடடபட்டா’ பாடல் வெளியான ஒரேநாளில் யூ-ட்யூப் தளத்தில் சாதனை படைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details