தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 26, 2021, 1:33 PM IST

1. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல்செய்தார்.

2. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு - இனி தரமான அரிசிதான்!

பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) மூலம் தமிழ்நாடு அரசு விரைவில் தரமான அரிசியை வழங்கும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பேரவையில் தெரிவித்தார்.

3. அனைவருக்கும் இது கட்டாயம் - பம்பர் டூ பம்பர் காப்பீடு

செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. உச்ச நீதிமன்றத்துக்கு 3 பெண்கள் உள்பட 9 நீதிபதிகள்: கொலிஜியத்தின் பரிந்துரை ஏற்பு

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.

5. ’தடையின்றி மின்சாரம் கிடைத்திட ரூ.58 கோடி செலவிடப்பட்டுள்ளது’ - தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி: மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகுக்கும் வகையில் அரசு சார்பாக 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

6. கேரளாவில் ஜெட் வேகத்தில் பரவும் கரோனா... ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

கேரள மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட்.25) மட்டும் 31 ஆயிரத்து 445 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

7. மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்த கரோனா எண்ணிக்கை: 3ஆவது அலைக்குத் தயாராகிறதா இந்தியா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8. 'புல்லட் பண்டி' போடுங்க... பால் குடிக்க அடம்பிடிக்கும் சிம்பான்சி

ஹைதராபாத்: தாயின் இறப்பால் ஒரு வாரமாக பால் குடிக்காமல் இருந்த கோண்டோ சிம்பான்சி, ஸ்மார்ட்போனில் புல்லட் பண்டி பாடல் பார்த்துக்கொண்டு குழந்தைபோல் சமத்தாக பால் குடிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

9. Tokyo Paralympics: பவினாபென் படேல் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 26) பிரிட்டனின் மேகன் ஷாக்லெட்டானை வென்று இந்திய டேபில் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் 16ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

10. 'பாக்ஸிங்கை விட ரத்த பூமி' - வாத்தியருக்கு அட்வைஸ் கொடுத்த கபிலன்

ட்விட்டர் பக்கத்தில் இணைந்த பசுபதிக்கு, நடிகர் ஆர்யா அட்வைஸ் கொடுத்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details