தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2021, 12:54 PM IST

ETV Bharat / city

ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்.

ஒரு மணி செய்திச் சுருக்கம்
ஒரு மணி செய்திச் சுருக்கம்

1. டோக்கியோ ஒலிம்பிக் - மகளிர் ஹாக்கியில் இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

2. இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு உள்பட 9 அங்காடிகள் இன்று முதல் (ஜூலை.31) செயல்பட அனுமதி இல்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.

3. போட்டாச்சு.. போட்டாச்சு... ராகுல் காந்தி!

ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

4. பென் ஸ்டோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

5.’10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஒரு சமூக அநீதி’ - ஜவாஹிருல்லா

”இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரநிலை ஒருபோதும் அளவுகோலாக இருக்க முடியாது என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்,

6. ’தேசத்தைவிட மொழிதான் முக்கியம்’ - ஜி.வி.பிரகாஷ்

சென்னை: ”மொழியா, தேசமா என்றால் எனக்கு மொழிதான் முக்கியம்” என சுதந்திர தின சிறப்பு பாடல் அறிமுக விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

7. 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 649 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

6. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கோவை: ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

7. திமுகவை எதிர்த்து மாநில அளவில் பரப்புரை: பாஜக

சேலம்: :தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பெண்களை ஏமாற்றக்கூடிய வஞ்சிக்கின்ற அரசாக உள்ள திமுக அரசை எதிர்த்து மாநில அளவில் பாஜக பரப்புரை செய்யும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

8. ரம்யாவின் ரம்யமான

ரம்யாவின் ரம்யமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

9. கூட்டுறவு கடன் சங்கத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் உதவியுடன் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டுறவு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

10.இந்திய நிறுவனங்களுக்கு வாரம் 1,738 சைபர் தாக்குதல்கள் - ஷாக்கிங் ரிப்போர்ட்

இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில் வாரத்திற்கு சராசரியாக 1,738 முறை சைபர் தாக்குதலை சந்தித்திருப்பதாக செக் பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details