தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

மதியம் ஒரு மணி செய்திச்சுருக்கம்
மதியம் ஒரு மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 9, 2021, 1:13 PM IST

1. மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் 12ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

2. ஏடிஎம் கொள்ளை - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

ஏடிஎம் கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போது, கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழரசன் என்பவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

3. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் இறங்குதளம் விரிவாக்கப் பணிகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினர்.

4. நீட் தேர்வுக்கு முன், எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விவரம்

நீட் தேர்வு வருவதற்கு முன்னர் அரசுப் பள்ளியில் படித்து எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பில் இரண்டு இலக்கத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வு அறிமுகம் செய்த பின்னர் மூன்று ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது.

5. 21 எழுத்தாளர்களுக்கு விருது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 21 எழுத்தாளர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

6. அப்போதே மகேந்திரன் வந்திருந்தால் கோவையையே வென்று இருப்போம் - ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பே மகேந்திரன் திமுகவில் இணைந்திருந்தால், கோயம்புத்தூரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7. பல்கலைக் கழகங்களில் முறைகேடு: விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சேலம் பெரியார், மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலை ஆகிய பல்கலைக்கழகங்களில் நிர்வாக ரீதியில், பதவி உயர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8. ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாடும் மோடி!

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற உள்ள இந்திய வீரர்களிடையே காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.

9. சினிமாவின் கதை ராகங்களை உருவாக்கிய கே.பாலசந்தரின் 91ஆவது பிறந்தநாள்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 91ஆவது பிறந்த தினம் இன்று. அவரது பிறந்தநாளில் அவர் சினிமாவில் சாதித்த நல் தருணங்களை நினைவுகூர்வோம்.

10. வெளியான ஹிருத்திக் - தீபிகாவின் ‘ஃபைட்டர்’ பட அப்டேட்!

மும்பை: நடிகர் ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோனே நடிக்கும் 'ஃபைட்டர்' என்னும் புதியபடத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

ABOUT THE AUTHOR

...view details