தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 1 PM - top-10-news

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Feb 6, 2021, 1:01 PM IST

Updated : Feb 6, 2021, 1:51 PM IST

  1. ‘விவசாயக்கடன் தள்ளுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி’ - எஸ்.ஏ. சின்னசாமி

தர்மபுரி: விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பேராசிரியா் எஸ்.ஏ. சின்னசாமி கூறியுள்ளார்.

2. வேண்டுமென்றே தமாகா நிர்வாகி கைது - மாநில இளைஞரணித் தலைவர் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: கஞ்சா வழக்கில் வேண்டுமென்றே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியை காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாக மாநில இளைஞரணித் தலைவர் குற்றஞ்சாட்டினார்.

3. ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகளா? - தேதியை மாற்றக்கோரி சு. வெங்கடேசன் எம்பி கடிதம்

மதுரை: ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் சூழல் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித் துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) இயக்குநருக்கும் சு. வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

4. 'இயற்கை அழகை ரசிக்க மலை ரயில்களில் கண்ணாடிப் பெட்டிகள்!'

மதுரை: மலை ரயில்களில் இயற்கை அழகை ரசிக்க கண்ணாடிப் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

5. சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - அதிமுக நிர்வாகி கடிதம்

தேனி: சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறைக்கு தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி கடிதம் அனுப்பியுள்ளார்.

6. இஸ்ரோ தலைவர் சிவன் சொந்த ஊரில் சாமி தரிசனம்!

கன்னியாகுமரி: இஸ்ரோ சார்பில் 28ஆம் தேதி ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், அதன் தலைவர் சிவன் அவரது சொந்த ஊரில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.

7. லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது லாரி மோதிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

8. தம்பதியர் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 12 சவரன் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி: தம்பதியர் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 12 சவரன் தங்க நகையைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

9. ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த சென்னை - பெங்களூரு ஆட்டம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று (பிப். 5) நடைபெற்ற சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் கோலேதுமின்றி டிராவில் முடிவடைந்தது.

10. ஐபிஎல் 2021: கம்பேக் கொடுக்கும் ஸ்ரீசாந்த், எதிர்பார்ப்பை கிளப்பும் ஏலம்!

ஐபிஎல் 14ஆவது சீசன் வீரர்கள் ஏலம் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1,097 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

Last Updated : Feb 6, 2021, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details