தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - 9 pm Top 10 news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

9 pm Top 10 news
9 pm Top 10 news

By

Published : Dec 3, 2020, 9:50 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி, 10 முதன்மை செய்திகள் சுருக்கமாக காணலாம்.

1. வலுவிழந்தது புரெவி புயல்

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த 'புரெவி' புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2. இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி

எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

3. திமுக, பாஜக, இப்ப ரஜினி - அர்ஜுனமூர்த்தி பின்னணி?

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தியின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

4. கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.3 லட்சத்தை திருடிய பலே கில்லாடிகள் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி பதிவு!

மாதனூர் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த, 3 லட்ச ரூபாயை அவரை பின்தொடர்ந்து சென்று அருகில் இருந்தபடியே கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து இருச்சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் இரு திருட்டு கில்லாடிகளின் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகியுள்ளது.

5. காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் மீட்பு!

காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6. பிரேசிலுக்கு செல்லும் பிரிட்டன் கரோனா தடுப்பு மருந்து

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் 15 லட்சம் டோஸ்கள் பிரேசில் நாட்டிற்கு அனுப்பப்படுகிறது.

7. உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு

தற்போது 70 விழுக்காடு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை நடைபெற்றுவரும் நிலையில் அதை 80 விழுக்காடாக உயர்த்தி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

8. சிங்கம் களமிறங்கிடுச்சு: ஆறிலிருந்து அறுபது வரை காத்திருந்த ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவரது ரசிகர்கள் சிலர் என்ன மாதிரியான பார்வையை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்...

9. ’இந்தியாவில் படம் எடுத்ததில் மகிழ்ச்சி’ - கிறிஸ்டோபர் நோலன்

தனது படத்தின் சில காட்சிகளை இந்தியாவில் எடுத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.

10. ஐபிஎல் 2021இல் புதிதாக இரண்டு அணிகளா? பிசிசிஐ சொல்வது என்ன!

பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசப்படவுள்ள 23 அம்ச நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details