தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 09 AM - ஈடிவி பாரத் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9AM
TOP 10 NEWS 9AM

By

Published : Aug 12, 2020, 9:05 AM IST

கர்நாடகா பேருந்து தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையில் முடிந்த பேஸ்புக் பதிவு; பெங்களூருவில் ஊரடங்கு அமல்! துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

பெங்களூருவில் நேற்றிரவு (ஆக.11) நடந்த வன்முறை சம்பவத்தின்போது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும், கல்வீச்சு மற்றும் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களினால் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய்!

நாடும், நாட்டின் விண்வெளித் துறையும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவரை இன்று (ஆக.12) கொண்டாடுகின்றன. அவர்தான், இஸ்ரோ (ஐஎஸ்ஆர்ஓ) நிறுவனர் டாக்டர். விக்ரம் சாராபாய். அவருக்கு இன்று 101ஆவது பிறந்த நாள்.

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் விவரம் வெளியீடு!

சென்னை: கரோனா காலத்திலும் பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலர் ஊழல் வழக்கில் பணி இடமாற்றம் செய்யப்பட்டது தவறில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அலுவலரை பணி இடமாற்றம் செய்யும் அரசின் நடவடிக்கை தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்!

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்(61) நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைக்கு அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுழற்பந்து வீச்சாளர்களின் ஜாம்பவான் வார்னே!

2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தனது 600ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த நிகழ்வு நடந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இந்தியாவில் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்!

கூகுள் நிறுவனம் தனது புதிய முயற்சியாக விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் - சௌம்யா சுவாமிநாதன் கருத்து

டெல்லி : கரோனா காலக்கட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால் பள்ளிகளைத் திறக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தலைவர்களை விடுவிக்கக்கோரி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மனு

ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 16 பேரை விடுவிக்கக்கோரி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details