தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM

By

Published : Nov 4, 2021, 9:05 PM IST

Updated : Nov 4, 2021, 9:11 PM IST

  • புதிதாக 25 பேருக்கு ஜிகா வைரஸ்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜிகா வைரஸால் புதிதாக 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

  • நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விபத்து - உயிரிழப்பு 36ஆக உயர்வு!

நைஜீரிய நாட்டில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

  • மாநகராட்சியாக தரம் உயர்ந்தது 'தாம்பரம்'

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

  • அனுமதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 22 வழக்குகள் பதிவு!

அனுமதித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தவர்கள் மீது இன்று நண்பகல் 1 மணி வரை போடப்பட்டுள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  • தமிழ்நாட்டில் மேலும் 945 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று(நவ.4) மேலும் 945 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • உணவுப் பஞ்சம்: ஆப்கனில் மகள்களை விற்கும் பெற்றோர்!

ஆப்கானிஸ்தானில் உணவுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்டோர் மிகக் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ள சூழலில், இதன் காரணமாக சொந்த மகள்களை விற்கும் அவல நிலைக்கு அந்நாட்டின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

  • துலா உற்சவம்; அமாவாசை தீர்த்தவாரி... தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவத்தில் இன்று(நவ.4) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • பட்டாசு வெடித்ததில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு - தீபாவளியில் சோகம்

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நாட்டுப் பட்டாசுகளை மூட்டையில் ஏற்றிச்சென்றபோது, எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தந்தை, 7 வயது மகன் உயிரிழந்தனர்.

  • ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியர் வெங்கடேசனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஆற்றுப்பாலம் உடைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: துண்டிக்கப்பட்ட 20 கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் மெய்யூர் ஆற்று தரைப்பாலம் உடைந்துள்ளது.

Last Updated : Nov 4, 2021, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details