தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்..! - TOP 10 NEWS 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 9 AM  ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
TOP 10 NEWS 9 AM ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

By

Published : Feb 26, 2021, 10:10 AM IST

புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலக்கூறுக்கு நிலையான மாற்றைக் கண்டறிந்த சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தில் பிரதான மூலக்கூறான கேம்ப்டோதெசினுக்கு நிலையான மாற்றைக் கண்டறிந்து சாதனைப் படைத்துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி தூக்கிட்டுத் தற்கொலையால் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’

சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்ட நிலையில் இனி யார் என்ன சொன்னாலும் அதில் உடன்பாடு ஏற்படாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சலூன் கடைகள் அடைப்பு: முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் இன்று (பிப். 26) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

வனவிலங்கு பொருள்கள் கடத்தல் வழக்கு: முதன்மைத் தலைமைப் பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!

கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்படும் வனவிலங்கு சம்பந்தமான தந்தங்கள், தோல், பற்கள், நகங்கள் ஆகியவை கியூ.ஆர். கோடு கொடுக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கோரிய வழக்கில், தமிழ்நாடு வனவிலங்கு முதன்மைத் தலைமைப் பாதுகாவலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

‘சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’

சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்ட நிலையில் இனி யார் என்ன சொன்னாலும் அதில் உடன்பாடு ஏற்படாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானத்திற்காக தமிழ்நாடு சீடர்கள் 11 லட்சம் ரூபாய் நன்கொடை!

திவாரி கோயிலுடன் தொடர்புடைய தமிழ்நாட்டின் சீடர்கள் என்ற அமைப்பு ராமர் கோயில் கட்டுமானத்திற்காக 11 லட்சம் 40 ஆயிரம் ரூபாய் நிதியை நன்கொடையாக அளித்துள்ளனர்.

மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் அன்பிற்கினியாள்!

தந்தை மகள் பாசத்தைச் சொல்லும் 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் முதியவர் வெட்டிப் படுகொலை!

பூசேரி பாலம் அருகே முதியவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.

அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டிய தம்பி!

ஆரல்வாய்மொழி அருகே சொத்துக்காக சொந்த அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details