தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்...! - TOP 10 NEWS 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 9 PM  ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
TOP 10 NEWS 9 PM ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

By

Published : Feb 22, 2021, 9:22 AM IST

விவசாயிகளின் கோரிக்கைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின் உறுதி

விவசாயிகளின் நில உரிமை திமுக ஆட்சிக்கு வந்தபின் பாதுகாக்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிச்சயம் அரசியல் களம் காண்போம் - சகாயம்

ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் வாருங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சகாயம் தனது அரசியலுக்கான வருகையை அறிவித்தார்.

சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய 'சூரரைப் போற்று'

சென்னையில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'சூரரைப் போற்று' திரைப்படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை ஜல்லிக்கட்டு - 15 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசு

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளைப் பிடித்த வாடிப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரருக்கு கார் முதல் பரிசாக வழங்கப்பட்டது.

'கருணை மிகுந்த திமுக ஆட்சிக்கு வரும்!'

அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடப்பதால் திமுக ஆட்சிக்கு வந்தபின் விசாரணை மேற்கொள்ளப்படும் என திமுக தலைவர் பெருந்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்‌.

கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு: மருத்துவ மாணாக்கரின் போராட்டம் வெற்றி!

மாணவர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

யாரும் வாய்ப்பு தருவதில்லை - வடிவேலு வருத்தம்!

நடிக்க உடம்பில் தெம்பு இருந்தாலும், யாரும் வாய்ப்பு தருவதில்லை என்று நடிகர் வடிவேலு கண்கலங்கியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு... சட்டப்பேரவையில் இறுதி நிலைப்பாடு - நாராயணசாமி

பரபரப்பான சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகின்ற நிலையில் கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா!

சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த விஷ்வா ஓர் புதிய படத்தில் மீம் கிரியேட்டராக நடிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை மீது தாக்குதல்: இருவர் கைது!

யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன், உதவி பாகன் ஆகியோரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details