தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - ETV BHARAT TAMIL

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 AM
TOP 10 NEWS 9 AM

By

Published : Aug 17, 2020, 9:16 AM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாளை மதுக்கடைகள் திறப்பு

சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 18) முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

விமான கட்டணங்களை குறைக்க பயணிகள் கோரிக்கை!

சென்னை: சென்னையிலிருந்து மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமான டிக்கெட் கட்டணங்களைக் குறைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசனத்திற்காக புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவு!

சென்னை: புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை?

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கான மாணவர்கள் சேர்க்கைப் பணிகள் தொடங்க உள்ளன.

பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவிக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவரானப் பட்டியலினப் பெண்ணுக்கு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இந்த வீரர்கள் பங்கேற்க முடியாது!

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் இந்த இரு அணி வீரர்களும் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது.

'தொலைத்தொடர்பு உபகரணங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்' - டிராய்

டெல்லி: தொலைத்தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது மிகவும் அவசியம் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

வருமான வரி: வெளிப்படையான மதிப்பீட்டு முறைக்கான வழிகாட்டுதல் வெளியீடு

டெல்லி : வருமான வரிதாக்கல் செய்வதை எளிதாக்கும் வகையில் வெளிப்படையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களும் சட்டவிதிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

'டிரான்ஸ்ஃபார்ம் இந்தியா' குறும்படத்தை பிரமோட் செய்யும் பாலிவுட் இளம் ஜோடி!

'டிரான்ஸ்ஃபார்ம் இந்தியா' குறும்படத்தை ரிச்சா சாதா மற்றும் அலி ஃபசல் ஆகிய நடிகர்கள் பிரமோட் செய்து வருகின்றனர்.

உலகளவில் 2 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு!

உலக அளவில் கரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details