தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @7PM - top 10 news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் ...

top-10-news-7pm
top-10-news-7pm

By

Published : Jul 5, 2021, 7:07 PM IST

சூர்யாவை விவாதத்துக்கு அழைக்கும் பாஜக

ஒன்றிய அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை விடுத்து, நீட் தேர்வு குறித்த பொதுவிவாதத்துக்கு நடிகர் சூர்யா முன்வர வேண்டும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

'பெட்ரோல், டீசல் விலையை திமுக நினைத்தால் இப்போதே குறைக்கலாம்' - அன்புமணி

தொடர் விலையேற்றத்தைக் கண்டுவரும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை திமுக நினைத்தால் இப்போதே குறைக்கலாம் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு விவகாரம்: டெல்லியில் ஒன்றிய ஜல்சக்தித்துறை அமைச்சரைச் சந்திக்கும் அமைச்சர் துரைமுருகன்!

ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர செகாவத்தைச் சந்திக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(ஜூலை 5) டெல்லி சென்றுள்ளார்.

எந்த குடும்ப அட்டைக்கு ரூ.1000? - விவரம் உள்ளே

குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பரவியல் தகவலுக்கு அரசு அளித்துள்ள விளக்கம் உள்ளே.

தொழிற்கல்விபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை!

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

கிடார் கம்பியின் மேலே மீண்டும் கௌதம் மேனன்

சூர்யாவை வைத்து இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நாயகன் சூர்யாவின் கையில் காப்புடன் கிடாரும் இடம்பிடித்தது.

ஆர்டர் எடுக்கும் 'மணி ஹீஸ்ட் வாத்தி'!

வங்கி கொள்ளை குறித்து வெளியான 'மணி ஹீஸ்ட்' சீரிஸின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கல்!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் அத்துமீறிய புகாரில் 12 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் சதம் அடித்த பெட்ரோல் விலை

புதுச்சேரியில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details