தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 News 7 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்..

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 1, 2021, 7:05 PM IST

1. மாநிலங்களவைக்கு எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைக்கு திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

2. கோடநாடு வழக்கு... எடப்பாடி பயப்பட அவசியமில்லை - டிடிவி தினகரன்

கோடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் எடப்பாடி பழனிசாமி எந்த தவறும் செய்யவில்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

3. தொழிலாளர்களுக்கான உணவகம், இரவு தங்கும் விடுதி - அரசு அறிவிப்பு

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் தொழிலாளர்களுக்கான உணவகம், இரவு தங்கும் விடுதி ஆகியவை அமைக்கப்படும் என வீட்டு வசதி, சமூகநலத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. முதலமைச்சரை சந்தித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் - வீடுகள் கட்ட திட்டம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்ட திட்டமிட்டிருப்பதாகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

7. விரைவில் வாரத்தில் 3 நாள்கள் லீவு; குறைகிறது சம்பளம் - மத்திய அரசு அதிரடி

வரும் அக்டோபர் மாதம் முதல் ஊழியர்களின் பணி நாட்கள் மற்றும் இன்னபிற விஷயங்களில் மாறுதல்களை மத்திய அரசு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

8. நாட்டின் (G)as, (D)iesel, (P)etrol உயர்கிறது- ராகுல் காந்தி!

நாட்டின் ஜிடிபி (GDP) உயர்ந்து கொண்டேவருகிறது. அந்த ஜிடிபி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாய் அல்ல. மாறாக கியாஸ், டீசல், பெட்ரோல் விலை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

9. கோலியை முந்தினார் ரோஹித்; மீண்டு(ம்) வருவாரா ஃபேப் ஃபோரில்?

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 5ஆவது இடத்தையும், விராட் கோலி 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

10. கதை திருட்டு சிக்கலில் சங்கர் படம்!

தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து சங்கர் இயக்கவுள்ள படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details