தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News 3 PM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 1, 2021, 2:49 PM IST

1. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை அண்ணா சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2. குடிசை மாற்று வாரியம் இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா ஆறுதல்

சென்னை: ஓ. பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு சசிகலா நேரில் சென்று பன்னீருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

4. ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு - உதயநிதி நேரில் ஆறுதல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

5. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடம் - லிஃப்ட் கட்டாயம்

இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் லிஃப்ட் வசதி கட்டாயம் அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

6. இறைவா ஓபிஎஸ்ஸுக்கு சக்தி கொடு - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

7. தாலிக்குத் தங்கம், உதவித் தொகை கிடையாது

திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவித் தொகை கிடையாது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

8. சிலிண்டர் விலை உயர்வு - மக்கள் கவலை

சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

9. ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை செப்டம்பர் 15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

10. வடிவேலுவின் நாய் சேகருக்குச் சிக்கல்!

வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் 'நாய் சேகர்' படத்தின் தலைப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details