தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS 3 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 31, 2021, 3:19 PM IST

1. போதை பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்து சாலை மறியலில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

3. மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு

நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் வகுப்புகளைக் கவனிக்க அனுமதிக்கக் கோரிய வழக்கு விசாரணையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனக் கட்டாயம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள்

நீலகிரியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் நான்கு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

5. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம் கைது!

அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைதுசெய்யப்பட்டார்.

6. 'தமிழ்நாடு வருவோருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்'

அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வருவோர் இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்று கட்டாயம் காண்பிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7. மாநகராட்சியில் வார்டுகள் சீரமைக்கப்படும் - அமைச்சர் கே.என். நேரு

சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள வார்டுகள் மறுசீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

8. வரலாற்றில் முதன்முறை: ஒரேநாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரேநாளில் ஒன்பது நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

9. PARALYMPIC ARCHERY: ராகேஷ் குமார் தோல்வி

பாரா ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில், இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதிப் போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

10. இன்ஸ்டாகிராமில் ஜோதிகா - ஆரம்பமே அதகளம்

நடிகை ஜோதிகா, தற்போது முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இணைந்த முதல் நாளிலேயே 10,30,000 இணையவாசிகள் அவரை பின்தொடர்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details