தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் - 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jun 27, 2021, 3:02 PM IST

1. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

2. இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்!

பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

3. 'நான் தமிழ் மொழியின் அபிமானி' - பிரதமர் மோடி

'உலகின் பழமையான தமிழ்மொழி, தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

4. காசிமேடு சந்தையில் குறைந்த மீன்வரத்து... ஏமாற்றத்துடன் திரும்பிய அசைவப்பிரியர்கள்

காசிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 27) மீன் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். மீன் வரத்து அதிகம் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

5. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக குணமடைந்த 57,944 பேர்

இந்தியாவில் நேற்று (ஜூன்.26) ஒரே நாளில் 57 ஆயிரத்து 944 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6. 'மின்வெட்டுக்கு சாக்குபோக்குக் காரணம் சொல்லக் கூடாது' - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, சாக்குபோக்குக் காரணம் சொல்லக் கூடாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

7. தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்த குண்டாஸ்!

பாலியல் வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

8. அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. ஜம்முவில் பதற்றம்..

ஜம்மு விமான நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது.

9. ஆப்பிள் மரத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து போட்ட டிஐஜி

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

10. 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

4 முறை ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் மோ ஃபரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

ABOUT THE AUTHOR

...view details