தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதியம் 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச்சுருக்கம்...

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

By

Published : Jan 10, 2021, 3:04 PM IST

1. வா தலைவா! வா - ரஜினியின் அரசியல் வருகைக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2.'மூன்று மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை' - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: இலங்கை, குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3.கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 18,645 பேருக்குப் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 645 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 201 பேர் கரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

4.வா தலைவா! வா - ரஜினி ரசிகர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5.ரூ.50க்காக மனைவியைக் கொன்ற கணவன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கணவர் 50 ரூபாய் பணத்திற்காக தனது மனைவியைக் கொன்றதுடன், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

6.சிமென்ட் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன - நிதின் கட்கரி

சிமென்ட் தொழிற்சாலைகள் தங்கள் சுயலாபத்திற்காக சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றஞ்சாட்டியுள்ளார்

7.தடுப்பூசி போட்டுக்கொள்கிறாரா போப் ஆண்டவர்

போப் பிரான்சிஸ் அடுத்த வாரத்தில் கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

8.எஃப்.ஏ.கோப்பை: நியூகேஸிலை வீழ்த்தியது அர்செனல்!

இங்கிலாந்தின் எஃப் ஏ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்செனல் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூகேஸில் யுனைடெட் எஃப்சி அணியை வீழ்த்தியது.

9.சிட்னி டெஸ்ட்: 2ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் இந்தியா; வெற்றியைப் பெறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது.

10. அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி- இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

அடுத்த மூன்று மாதத்திற்குள் அனைத்து இஸ்ரேலியர்களுக்கும் கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details