தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - 3 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 3 pm
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்

By

Published : Jan 1, 2021, 3:05 PM IST

1. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: நடராஜன் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தமிழ்நாடு வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

2.'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும்' - வைகோ

சென்னை: திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்றும் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

3.2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

சென்னை: இரண்டாம் கட்ட மருத்துவப்படிப்பு கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

4.ரஜினியின் முடிவுக்கு பாஜக காரணமல்ல - குஷ்பு

சென்னை: ரஜினியின் முடிவுக்கு பாஜக காரணமல்ல என்று அக்கட்சியைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

5.பீலா ராஜேஷ் உள்பட ஏழு ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு!

கார்த்திகேயன், ஸ்வர்ணா, ஆஷிஷ் வச்சானி, பீலா ராஜேஷ் உள்பட ஏழு ஐஏஎஸ் அலுவலர்கள் முதன்மை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

6.2021ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளில், பச்சை வர்ணத்தில் மிளிர்ந்த பங்குச் சந்தை!

2021ஆம் ஆண்டின் முதல் நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119.98 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.60 புள்ளிகளுடனும் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது.

7.கண்ணும் கண்ணும் நோக்கிய ரொமாண்டிக் லுக்! விக்னேஷ் சிவன் - நயன் நியூ இயர் ஷேரிங்

நயனின் இடுப்பில் கை வைத்தபடி விக்னேஷ் சிவன் நிற்க, இருவரும் ரொமாண்டிக்காக நோக்கியவாறு எடுத்த புகைப்படம் 2021 புத்தாண்டின் முதல் வைரலாக மாறியுள்ளது.

8.பெங்களூரு விமான நிலையப் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு!

பெங்களூரு: குறைந்த மூடுபனியிலும் விமானத்தை இயக்குவதற்கான அனுமதி பெங்களூரு விமான நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

9.கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

கேரளாவில் பத்து மாதங்களுக்குப் பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிகள் திறக்கப்படுகிறது. 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். அரசு அறிவுறுத்தலின் படி ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அமர்ந்திருப்பார்.

10.படுகர் இன மக்களின் பூ குண்டம் ஹெத்தையம்மன் திருவிழா!

நீலகிரி: படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி, குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவில் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details